வேற்று மொழிகளுக்கு நாங்கள் எதிரியல்ல - சொல்வது கனிமொழி!

நவம்பர் 03, 2019 230

சென்னை (03 நவ 2019): பணி நிமித்தமாக மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்த மாநில மொழிகளை தெரிந்துகொள்வதிலோ அல்லது கற்றறிவதிலோ எந்தத் தவறும் இல்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை திரும்பியகனிமொழி, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “ இந்தி எனும் மொழியை கற்றுக்கொள்ளவேக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தி.மு.கழகம் இல்லை. ஆனால், தமிழர்கள் மட்டுமல்லாது எந்த மாநில மக்கள் மீதும் மொழியைத் திணிக்கக் கூடாது. அது கலாசார ஆக்கிரமிப்பு. ஆகவே எந்த மொழியை திணித்தாலும் திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கும்” எனக் கூறினார்.

மேலும் பணி நிமித்தமாக மற்ற மாநிலங்களுக்குச் செல்லும்போது அந்த மாநில மொழிகளை தெரிந்துகொள்வதிலோ அல்லது கற்றறிவதிலோ எந்தத் தவறும் இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...