அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்!

நவம்பர் 05, 2019 259

புதுச்சேரி (05 நவ 2019): கார் ஏசி வெடித்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி உழந்தைகீரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (32). கார் ஓட்டுநரான இவர் இன்று காலை காரை எடுத்தபோது திடீரென அதிலிருந்து புகை வந்துள்ளது. பின்னர் நொடியில் கார் ஏசி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் முத்துக்குமரன் உடலில் தீப்பற்றியுள்ளது.

இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக காரின் கண்ணாடியை உடைத்து அவரைக் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் தீ வேகமாகப் பரவியதில் முத்துக்குமரன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீஸார் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் கார் ஏசியில் கேஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த முத்துக்குமரனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...