பனிமூட்டமா? புகைமூட்டமா? - சென்னையின் நிலை இதுதான்!

நவம்பர் 06, 2019 245

சென்னை (06 நவ 2019): சென்னையில் பனிமூட்டமா? அல்லது புகை மூட்டமா? என்பதற்கு தமிழ் நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி காற்று மாசுபாடு இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதே சமயம் டெல்லி காற்று மாசுபாட்டால் சென்னையிலும் காற்று மாசுபாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான காரசார விவாதமும் நடந்து வருகிறது.

அதேபோல சென்னையில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து வருவதாகவும், காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற அளவை எட்டியுள்ளதாக காற்று மாசுபாடு கண்காணிப்பு மையம் அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது தற்போது பனி மூட்டம் இல்லை, புகை மூட்டம்தான் இருக்கிறது, காற்று ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...