கோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

நவம்பர் 07, 2019 346

புதுடெல்லி (07 நவ 2019): கோவை பள்ளிக்குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் கொலை வழக்கு குற்றவாளி மனோகரன் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கோவையை சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் முஸ்கான் மற்றும் ரித்திக் இருவரை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு மரண தண்டனையை உறுதி செய்து கடந்த ஆகஸ்டு 1 -ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்புக்கு எதிராக சீராய் ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன் மீதான தீர்ப்பை கடந்த அக்டோபர் 16 -ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் இன்று வரை தூக்கு தண்டணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலினாரிமன் தலைமையிலான அமர்வு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மூன்று நீதிபதிகள் இன்று வழக்கை விசாரித்த நிலையில், இரண்டு நீதிபதிகள் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யலாம் என்று கூற, ஒரு நீதிபதி தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கலாம் என்று தெரிவித்தார். எனினும், பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்தின் அடிப்படையில் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

மற்றொரு குற்றவாளி மோகன கிருஷ்ணன் என்கவுண்டரில் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...