ரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்!

நவம்பர் 07, 2019 300

சென்னை (07 நவ 2019): ரஜினி விருது குறித்து விமர்சனம் செய்த சீமானை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் , முக் குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ், இதுகுறித்து தெரிவிக்கையில் நாம் தமிழர் கட்சி சீமான் எல்லாவற்றையும் அரசியல் ஆக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்.

எதில் அரசியல் செய்ய வேண்டுமோ? அதில் தான் அரசியல் செய்யணும். எல்லாத்தையும் அரசியல் ஆக்குவது ரொம்ப ரொம்ப கீழ்த்தரமான அரசியல். ரஜினி ஒரு பாஜகவின் ஆள் என்பதால் தான் விருது கொடுக்கிறார்கள் என்று சீமான் சொல்வது மிகவும் தவறு.

சீமான், தனிப்பட்ட முறையில் ரஜினி மீது இருக்கும் கோபத்தை இதுபோன்ற நேரங்களில் அரசியல் ஆக்குவது துளியும் கூட ஏற்புடையது அல்ல என காட்டமாக பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...