இளம் பெண்ணின் உயிரை பறித்த சரவணன் மீனாட்சி சீரியல்!

நவம்பர் 07, 2019 345

சென்னை (07 நவ 2019): சரவணன் மீனாட்சி டிவி சீரியலில் செல்ஃபி எடுப்பது போல் செல்ஃபி எடுக்க முயன்று இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை பட்டாபிராம், நவஜீவன் நகரை சேர்ந்தவர் அப்புவுக்கும், காந்தி நகரை சேர்ந்த மெர்சி, என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது.

அவர்கள் கடந்த 4ம் தேதி பிற்பகல் 3 மணியளவில், ஆவடி அடுத்த மிட்ணமல்லி கண்டிகை கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள 30 அடி ஆழ விவசாய கிணற்றின் உள்ளே, படிக்கட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கிணற்றில், 14 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது. அப்போது மெர்சி. ஒரு டிவி சேனலில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொலைகாட்சி தொடரில் கிணற்றுக்குள் அமர்ந்து கதாநாயாகியும் கதாநாயகனும் செல்பி எடுப்பது போல் சீன் வரும். அதே போல் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அப்போது மெர்சி எதிர்பாராதவிதமாக கிணற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற, அப்புவம் உள்ளே விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களது அலறலை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதில், அப்பு உயிருடன் மீட்கப்பட்டார். மெர்சி நீரில் மூழ்கி இறந்தார். அவரது சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மெர்சியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...