எஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கையாளர்கள்!

நவம்பர் 08, 2019 282

சேலம் (08 நவ 2019): எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ.200க்கு பதில் ரூ.500 வந்ததால் தகவல் தீயாய் பரவ வாடிக்கையாளர்கள் பணத்தை மகிழ்ச்சியாய் எடுத்துச் சென்றனர்.

சேலம், ஓமலூர் பண்ணப்பட்டியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இருந்து ரூ.200க்கு பதில் ரூ.500 வந்துள்ளது. இதனால் குஷி அடைந்த வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பணம் எடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த வங்கி அதிகாரிகள் பணம் மாறி வந்த ஏடிஎம் மையத்திற்கு பூட்டு போட்டனர். ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்ததற்கான காரணம் என்றும், பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்கு பொறுப்பு என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...