முட்டிக் கொள்ளும் ரஜினியும் திமுகவும்!

நவம்பர் 08, 2019 303

சென்னை (08 நவ 2019): தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருப்பதற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினி அவரது வீட்டில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஒரு நிருபர், தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார், அடுத்த முதல்வராக ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அப்படி இருக்கையில் ஏற்கனவே நீங்கள் கூறியபடி தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இன்னும் இருக்கிறாதா என கேட்டார். அதற்கு ரஜினி பதிலளிக்கையில், தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் இருக்கிறது என்றார்.

ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய துரைமுருகன், வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்பது அறிவியல் விதி. ரஜினி சொல்லிய வெற்றிடத்தை காற்று என்னும் ஸ்டாலின் நிரப்பிவிட்டார். இதை கட்சி ஆரம்பிக்கும் போது அவருக்கு தெரியும், என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...