பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 08, 2019 1007

சென்னை (08 நவ 2019): பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு எதுவானாலும் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று ஜமாத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில தலைவர் பி.ஏ.காஜா முயினுத்தீன் பாக்கவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு சாதகமாக இருந்தால் அதற்காக கொண்டாடவோ, பாதகமாக இருந்தால் அதற்காக கவலைப்படவோ வேண்டாம். அல்லாஹ்வின் மார்க்கத்தை யாராலும் குறைப்படுத்திவிட முடியாது. எனவே கண்டன ஆர்ப்பாட்டம், கூட்டமாக கூடுதல் எதையும் செய்ய வேண்டாம். மேலும் யாரேனும் ஆத்திரத்தை மூட்டும் வகையில் நடந்து கொண்டால் அமைதி காத்து நாட்டின் பொது அமைதியைக் கட்டிக் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புத் தலைவர்களும் அமைதி காக்க வேண்டி முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...