நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்!

நவம்பர் 09, 2019 201

சென்னை (09 நவ 2019): அயோத்தி குறித்த தீர்ப்பு நீண்ட நெடுநாள் பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், , ''நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வே தீர்ப்பை வழங்கியதற்குப் பிறகு, அதை எந்தவித விருப்பு-வெறுப்புக்கும் உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மத நல்லிணக்கம் போற்றி, நாட்டின் பன்முகத்தன்மைக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...