அதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்!

நவம்பர் 11, 2019 215

சென்னை (11 நவ 2019): அதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிக்கப் பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த ஸ்டாலின் ட்விட்ட பதிவில், கோவையில் அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளானதற்கு, அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததே காரணம் என்றும் அதனை காவல்துறையினர் மறைப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுகவினரின் விளம்பர வெறிக்கு ஒரு இளம் பெண் பாதிக்கப் பட்டுள்ளார். இவர்களது விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...