சீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை!

நவம்பர் 12, 2019 273

சீர்காழி (12 நவ 2019): நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது பள்ளி மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டு படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சீர்காழி அருகே சித்தன் காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாயியின் 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு படித்துவருகிறார்.பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவியை காணவில்லை என அக்கம் பக்கம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர்.

பின்னர் தோட்டத்தின் பின்புறமுள்ள பகுதியில் மாணவி இறந்து கிடந்ததைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிபடையில் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கவிதாவின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் கல்யாணசுந்தரம் (30), மாணவியை பாலியல் பலத்காரம் செய்து கழுத்தை நெறித்துக் கொலை செய்ததது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைதுசெய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...