ஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

நவம்பர் 12, 2019 135

வேலூர் (12 நவ 2019): வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐயால் பேரறிவாளன் கடந்த 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் அவரது மனைவி அற்புதம்மாள். இவர்களது மகன் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ.யால் பேரறிவாளன் கடந்த 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 28 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளார். பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு அவரது தாயார் அற்புதம்மாள் முயற்சி செய்து வருகிறார். அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் அவருக்கு இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. இந்நிலையில் பேரறிவாளனின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், தாயர் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று ஒரு மாத பரோலில் பேரறிவாளன் வெளியே வந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...