பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்வு!

நவம்பர் 14, 2019 271

பரங்கிப்பேட்டை (14 நவ 2019): கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயல்பட்டு வருகிறது, இந்த ஜமாஅத் சுனாமியின் போதும், தானே உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போதும் சிறப்பாக செயல்பட்டு தமிழக, மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பாராட்டினை பெற்றுள்ளது.

மூன்றாண்டுக்கு ஒரு முறை நடைபெறும், இந்த அமைப்பிற்கான தலைவர் தேர்வில் டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் ஏகமனதாக ஐந்தாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த பதவிக்கு நான்கு முறை தேர்வுக்குழுவினராலும், ஒரு முறை தேர்தல் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக பதவி வகிக்கும் டாக்டர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், பேரூராட்சி மன்ற துணைத்தலைவராகவும், தொடர்ந்து இருமுறை பேரூராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகித்துள்ளார்..

இவரின் சேவையை பாராட்டி தமிழகத்தின் ஆளுநர் ரோசைய்யா விருது வழங்கி கவுரவவித்தது குறிப்பிடத்தது. மத்திய ஜவுளி துறை அமைச்சர் அஜய் தாம்தா விருது வழங்கி பாராட்டினார். புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில் காயிதேமில்லத் விருது வழங்கியும் கவுரவிக்கப்பட்டார்.

மீண்டும் ஜமாஅத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது யூனுஸுக்கு, தற்போதைய தலைவர் எஸ்.ஓ. செய்யத் ஆஃரிப், தேர்வுக்குழு தலைவர் கலிமா. கே.சேக் அப்துல் காதர், பரங்கிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், நிர்வாகிகள், உள்ளூர் - வெளியூர் - சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பரங்கிப்பேட்டை மக்களும், சமூக ஆர்வலர் அருள் முருகன், புருசோத்தமன், கா.மு.கவுஸ் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரித்துள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...