பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த போராட்டம் ரத்து!

நவம்பர் 14, 2019 289

சென்னை (14 நவ 2019): பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டி தமுமுக சார்பில் வரும் 19 ஆம் தேதி தனியாக நடத்தவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் 21 ஆம் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதால் தமுமுக அதில் கலந்து கொண்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதை அடுத்து 19 ஆம் தேதி போராட்டம் ரத்து செய்யப்படுவதாக தமுமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...