பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு!

நவம்பர் 14, 2019 430

சென்னை (14 நவ 2019): தமுமுக அறிவிப்பை தொடர்ந்து பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் நடத்த இருந்த பாபர் மசூதி தீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்தை ரத்து செய்துள்ளது.

பாபர் மசூதி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி வரும் நவம்பர் 21 ஆம் தேதி பல்வேறு கட்சிகள், அமைப்பினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் இதே கருத்தை வலியுறுத்தி வரும் 19 ஆம் தேதி தமுமுக நடத்த இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டு, வரும் 21 ஆம் தேதி அனைத்து அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தை வலுப்படுத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் நாளை 15 ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டு வரும் 21 ஆம் தேதி அனைத்து அமைப்பினர் போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவுசெய்துள்ளது.

அதேவேளை சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் என்றும் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...