சென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா பர்வீன்!

நவம்பர் 15, 2019 1011

திருச்சி (15 நவ 2019): திருச்சி தனியார் கல்லூரி மாணவி ஜெப்ரா பர்வீன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் தனியார் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாணவி ஜெப்ரா பர்வீன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் திருச்சியில் கே.கே.நகர் அடுத்த கே.சாத்தனூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மகளிர் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தொடர் முஸ்லிம் மாணவிகளின் மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...