தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்!

நவம்பர் 15, 2019 418

சென்னை (15 நவ 2019): தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீபின் தந்தை பல்வேறு கேள்விகளை ஊடகத்தின் முன்பு வைத்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப்.. இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் தங்கியிருந்தவர் திடீரென கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த தற்கொலையின் பின்னணியில் கல்லூரி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியகள் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது. குறிப்பாக சுதர்சன் பத்மநாபனே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்துல் லத்தீப் பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார்.

எனது மகள் கடிதம் எழுதும் பழக்கம் உடையவள். வீட்டில் என்ன நடந்தாலும் கடிதம் எழுதுவாள். அப்படியிருக்க தற்கொலை செய்ததாக சொல்லப்படும் நேரத்தில் என் மகள் கண்டிப்பாக கடிதம் எழுதியிருப்பாள் .. அது எங்கே..?

.ஹாஸ்டல், உணவகம், நூலகம்போன்ற இடங்களின் CCTV பதிவுகளை ஐஐடி நிர்வாகம் தருவதற்கு தாமதிப்பது ஏன்..?

என் மகள் கயிற்றில் தூக்கு மாட்டிக் கொண்டாள் என்று சொல்கிறார்கள். அவளது அறையிலும் கயிறு இல்லை, வெளியிலிருந்தும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை..அந்த கயிறு எப்படி கிடைத்தது.

மரணிப்பதற்கு முன்பான இரவில் உணவகத்தில் வைத்து 1மணிநேரம் எனது மகள் அழுதிருக்கிறாள். அவளை சக மாணவி தேற்றியிருக்கிறார். யார் அந்த மாணிவி.? 1மணி அழுகிறாள் எனில் அப்படி என்ன தொல்லைகளை எனது மகள் சந்தித்தாள்.

மரணமடைந்த நாளில் கூட எனது மகளின் அறையில் வேறு நபர்கள் சென்றிருக்கிறார்கள். எனது மகளின் அறை அலங்கோலமாக களைந்து கிடந்த்து.

எனது மகளின் அறையை புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. ஏன்..? எனது மகளின் அறையிலிருந்த மற்றொரு மாணவி அறையை காலி செய்துவிட்டு வேறொரு அறைக்கு சென்று விட்டார்

தினமும் இரவு 8மணிக்கெல்லாம் விடுதிக்கு சென்றுவிடும் எனது மகள் சம்பவம் நடந்த அன்று 9மணிக்கு உணவகத்தில் வைத்து அழுதிருக்கிறாள் எனில் அப்படி என்ன துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.?

எப்பொழுதும் தேர்வின் விடைத்தாள்களை தானே சென்று வாங்கி வரும் என் மகள் பாத்திமா சம்பவம் நடப்பதற்கு முன்பாக தனது தோழியை அனுப்பி சுதர்சன் பத்மநாபனிடம் விடைத்தாளை வாங்கி வரச் சொல்லியிருக்கிறார் எனில் என்ன நடந்தது..?

சம்பவம் நடந்த அன்று 9 மணிக்கு உணவகத்தில் அமர்ந்து எனது மகள் பாத்திமா அழுது கொண்டிருக்கிறோம் போது 9:30வரை சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தில் தான் இருந்திக்கிறார்.

எனது மகள் மரணத்தை இதுவரை ஐஐடி யின் அதிகாரப்பூர்வமாக என்னிடமோ, எனது மனைவியிடமோ பேசாசது ஏன்..? அதுமட்டுமல்லாது ஐஐடி யின் மாணவர்களோ, ஆசிரியர்களோ, பேராசிரியர்களோ யாருமே எங்களிடம் ஆறுதலைக் கூட சொல்லாதது ஏன்..?? என பல்வேறு கேள்விகளை அப்துல் லத்தீப் முன் வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...