உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்!

நவம்பர் 16, 2019 218

சென்னை (16 நவ 2019): முரசொலி நிலம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டியல் இனத்தவர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி அலுவலக்ம் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. புகார் தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.

உதயநிதி ஸ்டாலினிடம் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19-ம் தேதி சாஸ்திரி பவனில் விசாரணை நடத்த உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...