திமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்? - போட்டுடைக்கும் கோவை செல்வராஜ்!

நவம்பர் 16, 2019 303

சென்னை (16 நவ 2019): திமுக இப்போது இருக்கும் நிலையில் மீண்டும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய கோவை செல்வராஜ் செ "அதிமுக 2021 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் மகத்தான வெற்றியும் பெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் தோல்வியில் இருந்து மு.க ஸ்டாலின் இன்னும் மீளவில்லை, .

மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அதிமுக வின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம். அதிமுக தற்போது தெளிவான தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

அதிமுக விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல் தோல்வியில் இருந்து இன்னுன் மீளவில்லை, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஸ்டாலின் அச்சம் கொள்கிறார். மேலும், திமுகவிற்குள் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. அதனால் இந்த தேர்தலை தள்ளிப்போட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.

தமிழக அரசால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...