திருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக பொங்கி எழுந்த விசிகவினர்!

நவம்பர் 18, 2019 336

சென்னை (18 நவ 2019): திருமாவளவனை அவமரியாதையாக ட்வீட் மூலம் விமர்சித்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகை இட்டுள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசியபோது, மசூதி சர்ச் குறித்து பெருமையாகவும், கோவில்கள் குறித்து கொச்சையாகவும் பேசியிருந்தார்.

இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர். இதனை அடுத்து. இப்பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த திருமாவளவன், அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்தார்.

ஆனால் நடிகை காயத்ரி ரகுராமும், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என விமர்சித்திருந்தார்.

இது விசிகவிரை பொங்கி எழ செய்தது. இதனால் காயத்ரி ரகுராமைக் கண்டித்து சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் காயத்ரி ரகுராம்மின் வீட்டின் முன்பு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல கூறியதால், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...