மாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன்னாள் நீதிபதி!

நவம்பர் 18, 2019 346

சென்னை (18 நவ 2019): அரசியல் செய்யலாம் அதற்காக பொய்யான தகவல்கள் மூலம் அரசியல் செய்யக்கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திமுக தலைவர் ஸ்டாலின் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை, வேறொரு காரணத்திற்காகத்தான் கைதானார். என்று பிரச்சாரம் செய்தார்.

இது பெரும் புயலைக் கிளப்பியது. இதற்கு திமுக தரப்பில் பெரும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

மாஃபா பாண்டியராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அவரின் வீட்டின் முன்னால் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் ஈடுபட்டனர். மேலும் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின், தொண்டர்கள் போராட்டம் நடத்த வேண்டாம் என கூறியதை அடுத்து, திமுகவினர் போராட்டதை கைவிட்டனர்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டாரா? இல்லையா? என்ற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது. மு.க.ஸ்டாலின் குறித்து பொய்யான செய்திகளை பரப்பும் கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இஸ்மாயில் ஆணையத்தில் இடம் பெற்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது, தமிழ்நாடு முழுவதும் மிசா சட்டம் மூலம் திமுகவினர் 450 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் முக்கியமான தலைவர்கள் முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, சிட்டி பாபு எம்.பி போன்றோர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தாக்கப்பட்டது உண்மை. ஸ்டாலின் என்ன காரணித்திற்காக உள்ள வைத்தார்கள் என்ற ஆதாரம் தேவையில்லை. ஸ்டாலின் மிசா கைதியாக வைக்கப்பட்டதுக்கு காரணம் திமுக கழகத்தை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கிலும், திமுக கழக தலைவர் குடும்பத்துக்கு மன ரீதியான மனஉளைச்சலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கைது செய்யப்பட்டார்கள். என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...