திருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

நவம்பர் 19, 2019 276

சென்னை (19 நவ 2019): திருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

நடிகையும் பாஜக அனுதாபியுமான காயத்ரி ரகுராமும், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு இருந்தார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராமுக்கு எதிராகவும் அவரது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து ட்விட்டர் நிர்வாகம் காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கை முடக்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...