தமிழக மருத்துவத் துறையில் லேப் டெக்னீசியன் வேலை!

நவம்பர் 20, 2019 357

சென்னை (20 நவ 2019): தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் தற்பொழுது ஒப்பந்த மற்றும் ஒருங்கிணைந்த ஊதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ள 1508 லேப் டெக்னீசியன் (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா்) கிரேடு 3 நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.

நிறுவனம்: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம்

பணி: Laboratory TechnicianGrade-III

காலியிடங்கள்: 1508

சம்பளம்: மாதம் ரூ.8,000

தகுதி: 12-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் மருத்துவக் கல்லூரி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் சி.எம்.எல்.டி ஓராண்டு பயிற்சி முடித்திருப்பதுடன், நல்ல உடலமைப்பு, நல்ல பார்வைத் திறன் மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் சி.எம்.எல்.டி கல்வியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

இந்த பணி குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/LT_Gr_III_2019_Notification_19112019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேதி: 19.11.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான் கடைசி தேதி: 09.12.2019

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...