ஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்!

நவம்பர் 20, 2019 238

திருச்சி (20 நவ 2019): ஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த எம்.கலாவதி (47) ஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இது அம்மாவட்டத்தில் இந்த ஆண்டு பதிவான முதல் ஹெச்1என்1 நோய் பாதிப்பாகும்.

இதையடுத்து அவரது உடலை பெற்றுச் செல்ல உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். இந்நிலையில், அவர்களிடம் நோயின் தாக்கம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. நோய் தொற்று பரவும் என்ற அச்சத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்காமல் உடலை திருச்சி மாநகராட்சியே தகனம் செய்தது.

மேலும் ஹெச்1என்1 பாதிப்பு பரவியுள்ளதா என்பதை கண்டறிய மருத்துவமனை வளாகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு அடுத்த இரு வாரங்களுக்கு கண்காணிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...