திருமாவளவனுக்கு ஆதரவாக கைகோர்த்த பா.ரஞ்சித்!

நவம்பர் 20, 2019 175

சென்னை (20 நவ 2019): தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்த நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பாஜகவினரை குறி வைத்தே இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திருமாவளவன் கோவில்கள், குறித்து பேசியது சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம், மிகவும் அவமரியாதையாக பதிவிட்டிருந்தார். இதனை அடுத்து காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதனிடையே திருமாவளவனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பா.ரஞ்சித், "ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள்,தனிமனித தாக்குதல்கள் &அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை" என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...