உச்ச நீதிமன்றத்தை நாடும் கனிமொழி!

நவம்பர் 20, 2019 267

சென்னை (20 நவ 2019): தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளரான ஏ.சந்தானகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழிஎம்.பி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

“வாக்காளரான ஏ.சந்தானகுமார் எனக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அதை நிராகரிக்க வேண்டும்’ என மனுவில் கனிமொழி கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

இதனை அடுத்து கனிமொழி உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...