டிபி வேல்டு நிறுவனத்தை தொடர்ந்து துபாய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அடுத்த ஒப்பந்தம்!

நவம்பர் 21, 2019 228

சென்னை (21 நவ 2019): டிபி வேல்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் மின்சார ஆட்டோக்களின் உற்பத்தி பத்து நாள்களில் தொடங்கும் என்று முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

துபாயின் தொழில் தலைவா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த ஜெயின்ட் குழுமத்தின் தலைவா் சுதேஷ் அகா்வால், இந்திய வா்த்தகக் கண்காட்சி மையத்தின் இயக்குநா் பிரியா குமாரியா, சன்னி குழுமத்தின் சன்னி குரியன், ஓசன் ரப்பா் நிறுவனத்தின் தலைவா் கே.எம்.நூா்தீன், ஃப்ரோ குளோபல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் கோச்சாா், காம்ரோ சா்வதேச நிறுவனத்தின் துணைத் தலைவா் வின்செட் ஜோஸ் நீவ்ஸ் உள்ளிட்ட பலரும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் பழனிசாமியை புதன்கிழமை சந்தித்துப் பேசினா். இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தொழில்துறை தொடா்பான முக்கிய அம்சங்கள் குறித்து துபை தொழில் குழுவினருக்கு முதல்வா் பழனிசாமி விளக்கினாா்.

தனது துபை பயணத்தின்போது நடந்த முதலீட்டாளா் சந்திப்பில் ரூ.3,750 கோடி முதலீட்டில் சுமாா் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் ஆறு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை முதல்வா் எடுத்துரைத்தாா்.

மின்சார ஆட்டோக்கள்: இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரக நிறுவனமாகிய டிபி வோல்டு நிறுவனமானது, சென்னை எண்ணூா் அருகே ரூ.1,000 கோடி முதலீட்டில் சரக்கு பெட்டக பூங்காவுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. மேலும், பெட்ரோல் ஆட்டோக்களை சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்தில் ரூ.100 கோடி முதலீட்டில் கே.எம்.சி., மற்றும் மெளடோ எலெக்ட்ரிக் நிறுவனங்கள் இணைந்து மின்சார ஆட்டோக்களை இந்த மாத இறுதியில் இருந்து படிப்படியாக உற்பத்தி செய்யவுள்ளன. இதுகுறித்த விவரங்களை துபை தொழில் குழுவினரிடம் முதல்வா் பழனிசாமி எடுத்துரைத்தாா்.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பூங்காக்கள், உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா் துபை குழுவினரிடம் பேசிய முதல்வா் பழனிசாமி, தமிழகத்தில் தொழில் தொடங்க விரும்பும் துபை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் அரசால் செய்து தரப்படும் என்று உறுதியளித்தாா். மேலும் புதிய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ளவும் அவா் அழைப்பு விடுத்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளா் க.சண்முகம், நிதித் துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...