விமானத்தில் வந்த ஆறு மாத குழந்தை திடீர் மரணம் - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

நவம்பர் 21, 2019 315

சென்னை (21 நவ 2019): ஆஸ்திரேலியாவில் இருந்து கோலாலம்பூர் வழியாக, சென்னை வந்த விமானத்தில் பயணித்த 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேலையூரைச் சேர்ந்த சக்திமுருகன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், சக்திமுருகனின் மனைவி கீதா, அவரது தாய் பிரிட்டோ குயின் மற்றும் 6 மாத ஆண் குழந்தை ரித்திக் ஆகியோர் கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் இன்று 12.45 மணியளவில் வந்து சேர்ந்தனர்.

விமான நிலையம் வந்த பிறகுதான் குழந்தை மயக்கமாக இருந்ததை அறிந்தனர் பெற்றோர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், விமான நிலையத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டுச் சென்று பரிசோதித்ததில் குழந்தை 2 மணி நேரத்திற்கு முன்பாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தை ரித்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...