திருமாவளவன் குறித்து சொன்னேனா? - நடிகை கஸ்தூரி விளக்கம்!

நவம்பர் 21, 2019 374

சென்னை (21 நவ 2019): நடிகை கஸ்தூரிக்கு எதிராக விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.

சனாதன கல்வியை வேரறுப்போம்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, "கூம்பு வடிவில் இருந்தால் அது மசூதி, அதிக நீளம் கொண்டிருந்தால் அது தேவாலயம், அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இது இந்துத்வாவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பாஜக உறுப்பினரான நடிகை காயத்ரி ரகுராம் திருமா குறித்து அவமரியாதையாக பதிவிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். இதனால் அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி பதிவிட்ட பதிவுக்கு எதிராகவும் விசிகவினர் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகை கஸ்தூரி, நான் பட்டியலினத்துக்கு எதிரானவள் போல் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.. எனக்கும் திருமாவளவனுக்கும் விரிசலை ஏற்படுத்துகிறார்கள்.. என்னை வம்பிழுக்கிறார்கள்.. உங்களுக்கு பிடிக்கவில்லைன்னா.. என் கருத்து குற்றமாகிவிடாது.. என்று விசிகவினர் அளித்துள்ள புகாருக்கு நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

புனிதத்தலங்கள் அவமதிப்பு தொடர்பாகத் தனது கருத்தை பதிவு செய்த கஸ்தூரி திருமாவளவனை குறி வைத்தே பதிவிட்டதாக விசிகவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே கஸ்தூரி நான் யாருக்கு எதிரானவள் கிடையாது, பொதுவாகவே என் கருத்தை தெரிவித்திருந்தேன். விசிகவிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...