தலித் இளைஞரை காதலித்ததால் எதிர்ப்பு - பெற்ற மகளை தீ வைத்து கொன்ற தாய்!

நவம்பர் 21, 2019 162

நாகை (21 நவ 2019): தலித் இளைஞரை காதலித்ததற்காக பெற்ற மகளை தாயே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது.

நாகை மாவட்டம் வாழ்மங்கலம் பகுதியை சோ்ந்தவா் கண்ணன் – உமாமகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள், 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர், அதே ஊரைச் சோ்ந்த இளைஞரை காதலித்து வந்தார். அந்த இளைஞர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் காதலை அறிந்த பெற்றோர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மகளுக்கு 18 வயது ஆக இன்னும் சில தினங்களே இருந்த நிலையில், திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர். இந்த விசயம், உமா மகேஸ்வரிக்கு தெரியவந்தது. காதல் மற்றும் திருமணம் குறித்து மகளிடம், உமாமகேஸ்வரி கேட்டுள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, உமாமகேஸ்வரி மண்ணெண்ணெயை எடுத்து வந்து மகள் மீதும், தன் மீதும் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

தீக்காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். எனினும், ஜனனி சிகிச்சைபலனின்றி உயிரிழந்தாா். அவரது தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...