ஃபாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனு!

நவம்பர் 22, 2019 154

சென்னை (22 நவ 2019): சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த மரணத்தில் மர்மம் ஒளிந்திருப்பதாக ஃபாத்திமாவின் தந்தை குற்றம் சாட்டி வருகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 'பாத்திமா மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் சிபிஐ அல்லது தனி விசாரணை அமைப்பு இதுகுறித்து விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...