ரூ 50 ஆயிரம் வரையிலான ஊதியத்தில் அரசு வேலை!

நவம்பர் 22, 2019 284

சென்னை (22 நவ 2019): தமிழக அரசின் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 20 உதவியாளர், சமையலர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம்: அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, சென்னை

மொத்த காலியிடங்கள்: 20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: அலுவலக உதவியாளர் - 02

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: சமையலர் - 03
பணி: மருத்துவமனை பணியாளர் - 09
பணி: கிளீனர்: - 01
பணி: துப்புரவு பணியாளர் - 05

தகுதி: 8 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உயர்கல்வி படித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

வயது வரம்பு: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு பிரிவினருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. OC பிரிவினர் 30 வயதுக்கு மிகாமலும், BC, MBC பிரிவினர் 32க்குள்ளும், SC,ST பிரிவினர் 35க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம்: மாதம் ரூ.15,700 - ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி அரும்பாக்கம் சென்னை - 600 106 என்ற அலுவலகத்தில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும் விண்ணப்பித்தை பெற்று, அதனை பூர்த்தி செய்து மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.12.2019

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...