இளம் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் கற்றுக் கொடுக்கும் ஆசிரமம் - அதிர்ச்சி தகவல்!

நவம்பர் 22, 2019 330

சென்னை (22 நவ 2019): கவிஞர் வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்ட எழுதிக் கொடுத்தது நித்தியானந்தாதான் என்று அவரிடமிருந்து தப்பி வந்த பெண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் நித்தியாநந்தாவிடம் சிக்கியுள்ள தனது இரண்டு மகள்களை மீட்டுத்தர வேண்டி நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் மீண்டு வந்த பெண்களில் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதியது பெரும் சர்ச்சையானது. அப்போது இந்துத்வாவினர் வைரமுத்துவை வாய் கூசும் வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். அதில் குறிப்பாக நித்யானந்தா ஆசிரம்த்தில் உள்ள இளம் பெண்கள் வெளியிட்ட கெட்ட வார்த்தைகளால் பேசும் வீடியோ படு வைரலானது.

அந்த வீடியோவில் பேசிய ஒரு பெண் தற்போது நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து மீண்டு வந்து வைரமுத்துவை திட்ட எழுதிக் கொடுத்ததே நித்யானந்தாதான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு ஆபாச வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வயதுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, கவிஞர் வைரமுத்துவை திட்ட சொல்லி கொடுத்ததே நித்யானந்தாதான்.. அதுவும் கெட்ட வார்த்தைகளைதான் சொல்லி தந்ததே நித்யானந்தாதான்" என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...