அதிமுக மேயர் போட்டிக்கு விருப்ப மனு அளித்துள்ள பெண் மாடல் மீது ஆபாச அர்ச்சனை!

நவம்பர் 26, 2019 521

கோவை (26 நவ 2019): கோவை மாநகராட்சி மேயர் பதவிக்காக அ.தி.மு.க-வில் சோனாலி பிரதீப் என்ற வடமாநில பெண் விருப்புமனு கொடுத்துள்ளார். அவர் மீது ஆபாச அர்ச்சனைகளை அள்ளித் தெளிக்கின்றனர். நெட்டிசன்கள்.

இதுகுறித்து சோனாலி பிரதீப் கோவை சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ``நான் 2017-ம் ஆண்டு `மிசஸ் இந்தியா' மற்றும் 2019-ம் ஆண்டு `மிசஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்' பட்டம் வென்றுள்ளேன்.

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடம் எடுத்து வருகிறேன். அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்துகொண்டு, சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறேன். உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு அளித்துள்ளேன். நான் சமூக வலைதளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, என்னை பெண் என்றும் பாராமல் ஆபாசமாக சித்திரித்து, அசிங்கமான வார்தைகளைப் பயன்படுத்தி சிலர் பதிவுசெய்து வருகின்றனர். இதனால், நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி, குடும்பத்தினர் மத்தியில் அவப்பெயரை உண்டாக்கிய அந்தப் பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கி, அந்தப் பதிவுகளை பதிவேற்றம் செய்த நபர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், சோனாலி சைபர் க்ரைம் பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு மாவட்டம் 20-வது வார்டு தி.மு.க உறுப்பினர் ரகுபதி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். .

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...