முதலிரவுக்கு முன் பெண்ணிடம் கணவன் சொன்ன பகீர் வார்த்தை!

நவம்பர் 28, 2019 332

விருதுநகர் (28 நவ 2019): முதலிரவுக்கு முன் கணவன் மனைவியிடம் சொன்ன வார்த்தையால் மனம் உடைந்த மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர், கட்டையாபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் (எ) சரவணன். இவருக்கும், நெல்லையை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஜுன் மாதம் 6-ம் தேதி கல்யாணம் நடந்தது.

கல்யாணத்துக்கு 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் தரப்பட்டன. கல்யாணம் சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் முதலிரவுக்காக காத்திருந்த பெண்ணிடம் மாமனார் மூக்காண்டி, மாமியார் சண்முகசுந்தரி, மற்றும் கணவனின் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து வந்து, இன்றைக்கு முதலிரவு உங்களுக்கு நடக்காது என்று சொன்னார்கள். இதைக் கேட்டு அதிர்ந்த புது மணப் பென் பெற்றோரிடம் இதை சொல்லவும், அவர்களும் அதிர்ச்சி அடைந்து சரவணனை தனியாக கூப்பிட்டு விசாரித்தனர்.

அதற்கு என் அப்பா வற்புறுத்தியதால்தான் கல்யாணம் செய்து கொண்டேன் உனக்கு வேண்டுமானால் என் அப்பாவுடன் உல்லாசமாக இருந்துக்கோ.. என்னை தொந்தரவு செய்யாதே” என்று சொல்லியதுடன், மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் அந்த பெண் புகார் செய்யவும், புதுமாப்பிள்ளை சரவணன் உட்பட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...