அனகாபுத்தூரை சேர்ந்த நித்யா இருமல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே பகுதியில் உள்ள ஜெயம் என்ற கிளினிக்கிற்கு நித்யாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுஜாதா கருணாகரன் என்ற பெண் மருத்துவர் கையில் ஊசிப்போட்ட சிறிது நேரத்தில் மூச்சுதிணறல் ஏற்பட்டு நித்யா மயங்கிவிழுந்ததாக கூறப்படுகிறது.
பிறகு அந்த பெண் மருத்துவர் கூறியதை கேட்டு ஜெயின் என்ற தனியார் மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்துச் சென்ற பெற்றோர், அங்கு அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைஅழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு நித்யா அரை மணி நேரத்திற்கு முன்பாகவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, தவறான ஊசிப் போடப்பட்டதால் உயிரிழப்பு நேர்ந்ததாக கூறி சங்கர்நகர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.