வேலை வாய்ப்பு: ஒன்றியங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணி!

நவம்பர் 29, 2019 212

சென்னை (29 நவ 2019): தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் நாகப்பட்டினத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், இரவுக்காவலர் போன்ற இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

பணியிடம்: நாகப்பட்டினம்

மொத்த காலியிடங்கள்: 14

பணி: அலுவலக உதவியாளர் - 08
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பணி: எழுத்தர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

பணி: ஈப்பு ஓட்டுநர் - 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: இரவுக்காவலர் - 03
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nagapattinam.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், ஆணையர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக 02.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2019/11/2019111987.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...