வெளுத்து வாங்கும் மழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

நவம்பர் 30, 2019 257

சென்னை (30 நவ 2019): தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, சிதம்பரம், தஞ்சை, தூத்துக்குடி, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டப் பள்ளிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...