11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்!

டிசம்பர் 01, 2019 291

கோவை (01 டிச 2019): கோவையில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நண்பர்களுடன் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, , தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை சக நண்பர்கள் செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயண மூர்த்தி(30) ஆகிய 4 பேரை, ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் தலைமறைவான மற்றொரு இளைஞரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...