கனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!

டிசம்பர் 01, 2019 257

சென்னை (01 டிச 2019): கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இதேபோல், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், பரவலான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களை பொறுத்த வரையில், இலட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், ஆதலால் மீனவர்கள் இன்று குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிக்கும், நாளை இலட்சத்தீவு பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...