கோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி!

டிசம்பர் 02, 2019 182

கோவை (02 டிச 2019): கோவையில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...