தமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி!

டிசம்பர் 02, 2019 322

திருவாரூர் (02 டிச 2019): திருவாரூரில் பல்கலைக் கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் அருகே நீலகுடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் மைதிலி (19). இவர் இக்கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு அறையில் யாருமில்லாத நேரத்தில் மைதிலி விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரது அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அறையில் இருந்து ஓடி வந்து பார்த்தபோது மாணவி மைதிலி தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மைதிலியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் தொடர்ந்து மாணவிகள் பலியாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...