ஆபீஸ் பெண்களின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் - ரெயிடில் சிக்கிய திடுக் பின்னணி!

டிசம்பர் 02, 2019 426

சென்னை (02 டிச 2019): சென்னை தனியார் இறால் இறக்குமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் அவர்கள் எதிர்பார்க்காத பல அதிர்ச்சியும் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

பாலவாக்கத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில்குமார் - சித்ரா. 35 வயதான செந்தில்குமார், அடையாறில், தனியார் இறால் இறக்குமதி அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்-ஆக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், இவர்களது அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் ரெயிடு நடத்தி உள்ளனர். இதில், சில ஆவணங்கள், கம்ப்யூட்டர் டிஸ்க்குகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையே செந்தில்குமார் அதே அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னரே இவிவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. செந்தில் குமார் மனைவி கனவரின் தற்கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கிடையே வேறொரு தகவல் கசிந்துள்ளது. அதாவது ரெய்டின்போது செந்தில் குமாரின் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆய்வு செய்தபோதுதான், ஹார்டு டிஸ்க்கில் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை பற்றிதான் அதிகாரிகள் செந்தில்குமாரிடம் விசாரிக்க, அவர் அவமானம் தாங்காமல் ஆபீசுலேயே தூக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த ஆபாச வீடியோக்களில் இருந்தவர்கள் ஆபீலில் பணிபுரியும் பெண்கள் என்றும், அவர்களுக்கு தெரியாமலேய அப்பாவி பெண்கள் பயன்படுத்தும் பாத்ரூமில் மறைவாக வீடியோக்களை வைத்து பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனாலேயே மானம் போய்விடும் என்பதால் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

மேலும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...