தமிழகத்தில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலி!

டிசம்பர் 03, 2019 167

சென்னை (02 டிச 2019): தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.

மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் வீடுகள் உள்ளது. நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் அங்குள்ள குடியிருப்பின் பின்பக்க காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

அந்த சுவர் 4 ஓட்டு வீடுகளின் மீது வரிசையாக விழுந்தது. அங்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் சுதாரித்து எழுவதற்குள் வீட்டின் சுவர் விழுந்து அமுக்கியது. இதனால் சிறுவன், சிறுமி உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

இதுதவிர பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...