ஆவின் பால் – ஊடகங்கள் மூலம் பரவும் தவறான தகவல்கள்!

சென்னை (01 டிச 2022): ஆவின் நிறைகொழுப்பு பால் விலை உயர்வினை சமாளிக்க முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள் நிலைப்படுத்தப்பட்ட பாலுக்கு மாறத் தொடங்கியதால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் அதிகாரிகளோ ஆவின் பால் தினசரி விற்பனை 3லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாக தவறான தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சரிவடைந்த நிறைகொழுப்பு பால் விற்பனையை சரிசெய்ய நிலைப்படுத்தப்பட்ட பாலிற்கு (பச்சை நிற பால் பாக்கெட்) செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நிறைகொழுப்பு பாலினை தான் வாங்கியாக வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களை ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வருகிறது.

விளைவு நேற்று (30.11.2022) முதல் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் கொள்முதல் செய்யும் ஒவ்வொரு மொத்த விநியோகஸ்தர்களுக்கும் நிலைப்படுத்தப்பட்ட பால் சுமார் 5000ம் லிட்டர் வரை குறைக்கப்பட்டுள்ளதால் பால் முகவர்களுக்கான ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் விநியோகத்தை கடுமையாக குறைத்துள்ளனர். அத்துடன் மதிய நேர விநியோகத்தில் சமன்படுத்தப்பட்ட (நீல நிற பால் பாக்கெட்) பால் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட (பச்சை நிற பால் பாக்கெட்) பாலினை தவிர்த்து நிறைகொழுப்பு பால் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களுக்கு ஆவின் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சமன்படுத்தப்பட்ட மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் ஜாமீனில் விடுதலை!

புதுடெல்லி (02 பிப் 2023): கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை ஆனார். 2020ம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க...

பட்டுக்கோட்டை வாலிபர் வெளிநாட்டில் மரணம்!

பட்டுக்கோட்டை (03 பிப் 2023): வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்காக சென்ற பட்டுக்கோட்டை வாலிபர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் சர்க்கார்தோப்பு பகுதியை சேர்ந்த செல்வம் - கனகாம்பாள் தம்பதியரின் இளைய மகன்...