பாஜகவில் இணையும் நடிகர் விஜய் – கே.எஸ்.அழகிரி பரபரப்பு தகவல்

தர்மபுரி (09 பிப் 2020): நடிகர் விஜய் விரைவில் பாஜகவில் இணைவார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் திடீரென வருமானவரித் துறையினர் ரெய்டு செய்தனர் என்பதும், இரண்டு நாட்கள் அவருடைய வீட்டில் நடந்த ரெய்டில் எந்தவிதமான முறைகேடான பணமும் கைப்பற்றப் படவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டதும் தெரிந்ததே.

இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு குறி வைத்தது போல் நடிகர் விஜய்க்கும் பாஜக குறி வைத்துள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரியில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் கே.எஸ். அழகிரி பேசியதாவது:-

“இப்போதைக்கு பாஜகவுக்கு கிடைத்திருக்கும் இலக்கு விஜய். ரஜினிக்கு ஆதரவு குறைந்துவிட்டது என்பதை பாஜக உணர்ந்துள்ளது. ரஜினிகிட்ட இருக்கற ரசிகர்களுக்கெல்லாம் வயதாகி விட்டது, அதனால் இப்போது விஜயை குறி வைத்து பாஜக காய் நகர்த்துகிறது.

விரைவில் விஜய் அறிக்கை விடுவார். அது பாஜக தயாரித்த அறிக்கையாக இருக்கும். ஆனால் அதற்கு விஜய் தலையசைப்பாரா? என்பது இன்னும் ஒருவாரத்தில் தெரியும். விஜய் எதற்கும் அஞ்சாது இருக்க வேண்டும் நாங்கள் விஜய்க்கு துணையாக இருப்போம்” என்றார்.

ஹாட் நியூஸ்:

தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டு வீசிய பஜக நிர்வாகி!

ஈரோடு (24 ஜன 2023): ஈரோடு அருகே தன் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக நிர்வாகி சண்முகம் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணபதிபாளையம் மாணுவக்காடு போயர்...

சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும்...

ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் - முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்...