அதிமுக எம்.எல்.ஏ திமுகவில் தஞ்சம்!

Share this News:

சென்னை (10 அக் 2020): விளாத்திகுளம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2016 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் உமா மகேஸ்வரி. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியில் இணைந்த 18 எம்.எல்.ஏக்களில் உமா மகேஸ்வரியும் ஒருவர்.

இதனால் உமா மகேஸ்வரி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 2019-ல் விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மார்க்கண்டேயனுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அவருக்குப் பதில் சின்னப்பன், அதிமுகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சின்னப்பனை எதிர்த்து மார்க்கண்டேயன் சுயேட்சையாகப் போட்டியிட்டார். இதனால் அதிமுகவில் இருந்து மார்க்கண்டேயன் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று  மார்க்கண்டேயன், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


Share this News:

Leave a Reply