சசிகலா வரும் காரில் அதிமுக கொடி – அதிர்ச்சியில் எடப்பாடி!

சென்னை (31 ஜன 2021): பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து சென்னை வரும் சசிகலாவின் காரில் அதிமுக கொடி பறப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்த சசிகலா, கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 20 -ம் தேதி லேசான கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் மருத்துவமனையில் இருந்தே நேரடி விடுதலை செய்யப்பட்டார். இதற்கான ஒப்புதலும் சிறைதுறை சார்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் உடல் நிலையில் சசிகலாவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று பிற்பகல் சுமார் 12 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, மருத்துவமனையிலிருந்து காரில் புறப்பட்டார். அப்போது அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் அவர் சென்றார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைக்குப் பின் அ.தி.மு.க வை மீட்டெடுப்பதே சசிகலாவின் முதல் பணியாக இருக்கும் என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்து வரும் நிலையில் காரில் அ.தி.மு.க கொடி கட்டப்பட்டுள்ளது, அதனை உறுதி படுத்தும் வகையில் இருக்கிறது. இது எட்டப்பாடி தரப்பையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...

புகழ்பெற்ற துபாய் மாலின் பெயர் மாற்றம்!

துபாய் (24 ஜன 2023): துபாயின் சின்னம் என்று பலராலும் சிலாகித்து வர்ணிக்கக்கூடிய "தி துபாய் மால்" அதன் பெயரை மாற்றுகிறது. உலகின் மிக உயரமாக கட்டடமான புர்ஜ் கலீஃபாவின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஷாப்பிங்...

யோகி ஆதித்யநாத் இல்ல காவல் படை வீரர் மர்ம மரணம்!

லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற...