கூட்டணியில் சலசலப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் திடீர் முடிவு!

638

சென்னை (14 ஜூன் 2021): சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

அதிமுகவுடன் பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை தொடர்ந்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளரான பெங்களூரு புகழேந்தி நேற்று செய்தியாளர்களிடம் பாமக குறித்து பேசினார். அப்போது, பாமகவுக்கு 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி, ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் என பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.